search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வான் டெர் டுசன்"

    இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வான் டெர் டுசன் பொறுப்புடன் ஆடி 94 ரன்கள் எடுத்தார்.
    சார்ஜா:

    டி20  உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் குரூப் 1 பிரிவின் 39-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
     
    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. வான் டெர் டுசன் - மார்க்ரம் ஜோடி சிறப்பாக ஆடி இருவரும் அரை சதம் அடித்தனர். வான் டெர் டுசன் 60 பந்துகளில் 94 ரன்னும், மார்க்ரம் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்,

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 26 ரன்னும், மொயீன் அலி 37 ரன்னும், பேர்ஸ்டோவ் ஒரு ரன்னும், மலான் 33 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன், மார்கன் ஜோடி அதிரடியாக ஆடியது. லிவிங்ஸ்டோன் 28 ரன்னில் வெளியேறினார். மார்கன் 17 ரன்னும் எடுத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 10 ரன்கள் வித்தியாசததில் வெற்றி பெற்றது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் அந்த அணியால் அரை இறுதிக்குள் நுழைய முடியவில்லை.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபடா கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பிரெடோரியஸ், ஷம்சி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    ×